Thursday, September 4, 2008

Thriller Experience


ஏறத்தாழ ஏழு, எட்டு வருடங்களுக்கு அப்புறம் மீண்டும் சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்கிறேன். நான் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்திற்கு பெட்ரோல் விலை உயர்வு,  ஷேர் மார்கெட், பண வீக்கம் அப்படின்னு மொக்கை போட விருப்பம்மில்லை.

 

ரொம்ப வருடங்களுக்கு பிறகு சைக்கிள் ஓட்டறது ஒரு தனி சுகம்தாங்க, அதை எப்படி சொல்றதுன தயிர் சாப்பாட்டில் முள்ளங்கி சாம்பார் ஊத்தி சாப்பிடறமாதிரி இருந்தது. (இதை பத்தி அம்மாஞ்சி தனியா ஒரு பதிவு போடலாம்.)

 

ஸ்கூல் படிக்கும் வரை சைக்கிள்ல போறது ரொம்ப நல்லாதான் இருந்தது. என்னைக்கு காலேஜ் போக ஆரம்பித்தேனோ, ஆது ஒரு தீண்டதகாத காரியமா நினைக்க வேண்டியத போச்சு. நாம எழுதுற code- நாம டெஸ்ட் பண்றமாதிரி ஒரு கொடுமையான காரியமா தெரிஞ்சது.

 

நான் இருக்கும் இடத்திலிருந்து ஆபீஸ் ரொம்ப பக்கம் ஆகிவிட்டதால் சைக்கிளில் போறது ரொம்ப வசதியா ஆகிவிட்டது. நான் போற வழியில் ஜோதி நிவாஸ் காலேஜ் இருப்பதால் சந்தோசத்துக்கு எல்லையே இல்லை. ஜோதி நிவாஸ் காலேஜை கடக்கும் போது வருஷம் பதினாறு கார்த்திக் மாதிரி " பழமுதிர் சோலை எனக்குகத்தான் " பாட்டு பாடனும் போல இருக்கும், எங்க பாட்டு பாடி சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி புதையல் எடுத்த கேவலமா இருக்கும், அதனாலே நிறையவே அடக்கி வாசிக்கவேண்டியிருக்கிறது.

 

நாம பைக்கில் போகும் பொது தலைகவசம் போட்டுக்கிடுபோகனும், பெண்களை நாம பார்க்கலாம் ஆனா பெண்கள் நம்பளை பார்க்கமுடியுமா? ஆனால் சைக்கிளில்

அந்த மாதிரி பிரச்சனையே கிடையாது. "அண்ணலும் நோக்கினால் அவளும் நோக்கினால்" ஜொள்ளி நம்ம மிதிவண்டியை மிதிக்க வேண்டியதுதான்.

 

என்னடா பக்கம் பக்கம்மா சைக்கிளை பத்தி எழுதிவிட்டது Thriller Experience  பதிவு போட்டு இருக்கிறான் யோசிக்கிரீங்களா? அடியேன் வாங்கியது Hercules Thriller BiCycle அதனாலதான் இப்படி ஒரு தலைப்பு

 

 

1 comment:

Vivek said...

Is it you ?.... Its really amazing and good flow... All the best for your posts...